ஜப்பானில் தனிப்பெரும்பான்மையை இழந்தது ஆளும் LDP கட்சி! பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுகிறாரா?
சமீபத்திய மேல்சபை தேர்தலில் ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்ததால், பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது.
1955 இல் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இரு அவைகளிலும் LDP தனது பெரும்பான்மையை இழந்தது இதுவே முதல் முறையாகும்.
மேல்சபையில் 125 இடங்களுடன் பெரும்பான்மை பெற, LDP க்கு முன்னதாக இருந்த 75 இடங்களுடன் மேலும் 50 இடங்கள் தேவைப்பட்டன.
ஆனால், சமீபத்திய தேர்தலில் அக்கட்சியால் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதனால் தேவையான இடங்களை பெற முடியாமல் போனது. இதன் விளைவாக, LDP மேல்சபை அல்லது கீழ்சபை என இரண்டிலும் தனிப்பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கீழ்சபை தேர்தலிலும் இக்கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னடைவு இருந்தபோதிலும், பிரதமர் ஷிகெரு இஷிபா தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |