புறாவை கொலை செய்ய முயன்ற கார் ஓட்டுநர் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
ஜப்பானில் ஓட்டுநர் ஒருவர் காரை வைத்து ஒரு புறாவை கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புறாவை கொலை செய்ய முயன்ற நபர்
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் கார் ஓட்டும் 50 வயதுடைய அட்சுஷி என்பவர் புறா கூட்டத்தை துரத்த முயற்சி செய்துள்ளார். இதன்போது அதிர்ச்சியில் இருந்த புறா ஒன்று உயிரிழந்துள்ளது.
வேட்டை செய்யப்படும் புறாக்களை தவிர வேறு எந்த இன புறாக்களையும் கொல்வதற்கு அனுமதி இல்லை. மக்களின் வாழ்வாதார பொருட்களுக்கு ஏதேனும் சேதத்தை ஏற்படுத்தினால் உள்ளுர் அதிகாரியின் அனுமதியுடன் புறாக்களை கொல்லலாம்.
ஆனால் சட்டத்தை மீறி ஒருவர் புறாவை கொல்ல முயற்சி செய்துள்ளதால் அதிரடியாக அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை பார்த்த பாதசாரி ஒருவரே இதை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதாவது சாலையில் இருந்த புறாக்கள் மீது ஏற்றும் நோக்குடன் பச்சை சமிஞ்சை எரிந்தவுடன் காரை வேகமாக செலுத்தினார். ஆகவே இது தண்டனைக்குரிய விடயம் என பொலிஸாருக்கு தெரிவித்தேன் என கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த ஓட்டுநர், சாலைகள் மக்களுக்குரியது. கார் வருவதை கவனிக்க வேண்டியது புறாக்கள் தான் என கூறியுள்ளார். மேலும் வன உயிரிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |