சுற்றுலாப்பயணிகள் செய்யும் மோசமான விடயம்: அபராதம் விதிக்க ஜப்பான் முடிவு
The bad habit that Japan wants tourists to stop: சுற்றுலாப்பயணிகள் செய்யும் மோசமான விடயம் ஒன்றிற்கு அபராதம் விதிக்க ஜப்பான் முடிவு
ஜப்பானுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள், ஜப்பானில் குறைந்த விலையில் சிறந்த சூட்கேஸ்கள் கிடைப்பதால் அவற்றை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
சுற்றுலாப்பயணிகள் செய்யும் மோசமான விடயம்
அப்படி புதிதாக சூட்கேஸ்களை வாங்கும் சுற்றுலாப்பயணிகள், தங்கள் பழைய சூட்கேஸ்களை எங்காவது போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில், வீட்டுக்கு அருகே அநாதரவாக சூட்கேஸ் ஒன்று கிடந்தால், மக்களுக்குத் தோன்றும் முதல் உணர்வு, பயம்தான்.
ஆக, அவர்கள் பொலிசாரை அழைக்க, பொலிசாரும் சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது என்று தெரியாததால் அதை அறிந்துகொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க, மக்கள் மற்றும் பொலிசாரின் நேரமும் உழைப்பும் வீணாகிறது.
ஆக, இப்படி ஆங்காங்கு சூட்கேஸ்களை சுற்றுலாப்பயணிகள் விட்டுச் செல்வதைத் தடுப்பதற்காக, டோக்யோ நகரில் ஒரு விதி அறிமுகம் ஆக உள்ளது.
அந்த விதியின்படி, பழைய சூட்கேஸ்களை அநாதரவாக விட்டுச் செல்வோருக்கு கடும் அபராதம் விதிக்க, உள்ளூர் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விதி, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் ஆக உள்ளது.