ஜப்பானில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்
உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பயணத் தலங்களைக் கொண்ட ஜாப்பானில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கே காண்போம்.
கியோட்டோ (Kyoto)
கியோட்டோ 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானின் பேரரசின் தலைநகராக இருந்தது.
இதற்கு காரணம் நம்பமுடியாத கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளின் பாரம்பரியம் என்று கூறலாம். 
இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் இருந்து தப்பிய கியோட்டோ, நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் தெருக் காட்சிகளைக் கொண்ட நகரமாக விளங்குகிறது.
அத்துடன் மிகவும் ஈர்க்கக்கூடிய சில கோயில்கள் மற்றும் கோயில் தோட்டங்கள் இங்கு அமைந்துள்ளன. ஆகையால், கண்டிப்பாக ஜப்பானில் சுற்றிப்பார்க்க வேண்டிய நகரமாக கியோட்டோ உள்ளது.
டோக்கியோ
உலகின் மிகப்பெரிய நகரமாக உள்ள டோக்கியோ ஒரு வண்ணமயமான நகரம் ஆகும்.
இங்கு டிஸ்னிலேண்ட் (Disneyland), டிஸ்னி சீ (Disney Sea), டோக்கியோ ஸ்கைட்ரீ (Sky Tree) போன்ற நவீன இடங்கள் பிரபலமானவை ஆகும். 
ஷிபுயா: டோக்கியோவில் உள்ள ஷிபுயா (Shibuya) நவநாகரீக கடைகள் மற்றும் இரவு வாழ்க்கைக்காக புகழ்பெற்றது.
டோக்கியோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இதயம் என்று Asakusa கூறப்படுகிறது. இது பழமையான சென்ஸோ-ஜி கோயில் மற்றும் தெருவோர உணவுகளுக்குப் பெயர் பெற்றது.
ஷின்ஜுகு: வானளாவிய கட்டிடங்கள், கோல்டன் காயின் சிறிய பார்கள், நியான் விளக்குகளுடன் பரபரப்பான மையம் இங்குள்ளதால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா இடம் இதுவாகும்.
ஹராஜூகு: இளைஞர்களின் ஃபேஷன், டேகேஷிதா தெருவில் உள்ள விசித்திரமான கடைகள், அமைதியான மெய்ஜி ஜிங்கு ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 
உயெனோ: உயெனோ பூங்கா, டோக்கியோ தேசிய அருங்காட்சியம் மற்றும் உயெனோ உயிரியல் பூங்காவுடன் கூடிய கலாச்சார மையம் ஆகிய இங்கு பார்க்கக்கூடிய இடங்கள் ஆகும்.
கின்ஸா: உயர்தர ஷோப்பிங் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியான கின்ஸாவில் நன்றாக பொழுதை கழிக்கலாம்.
ஃபுஜி மலை (Mount Fuji)
ஜப்பானின் ஃபுஜி மலை டோக்கியோவிற்கு தென்மேற்கே, சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு செயல்படும் எரிமலையாகும்.
பல நூற்றாண்டுகளாக ஒரு புனித யாத்திரைத் தலமாக இது விளங்குகிறது. இதனால் ஜப்பானின் மூன்று புனித மலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும், இதன் உச்சிக்கு மலையேறுவது இன்றும் ஒரு பிரபலமான செயலாக உள்ளது.
எடோ காலத்து அச்சுப் படைப்புகள் உட்பட, எண்ணற்ற கலைப் படைப்புகளுக்கு கருப்பொருளாக இந்த ஃபுஜி மலை அமைந்துள்ளது. 
ஹிரோஷிமா (Hiroshima)
ஹிரோஷிமா என்பது ஜப்பானில் உள்ள ஒரு நகரமும் மாகாணமும் ஆகும். அணுகுண்டால் தாக்கப்பட்ட நகரமாக இருந்தாலும், மீண்டும் இங்கு கோட்டை கட்டப்பட்டது.
அமைதி நினைவுப் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்காக சிறந்ததாக இந்நகரம் அறியப்படுகிறது.
ஒசாகா (Osaka)
ஜப்பானின் ஒசாகா நகரம் ''நாட்டின் சமையலறை'' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இதன் அற்புதமான உணவு வகைகள், இரவு வாழ்க்கை, யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஜப்பான் ஆகும்.
செழுமையான வரலாறு கொண்ட ஒசாகா கோட்டை, கன்சாய் பிராந்தியம் ஆகியவை சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு சிறந்த மையமாக ஒசாகாவை காட்டுகின்றன. 
ஹொக்கைடோ (Hokkaido)
இந்நகரம் ஜப்பானின் வடகோடியில் அமைந்துள்ளது. அந்நாட்டின் இது இரண்டாவது பெரிய தீவாகும்.
பரந்த இயற்கை அழகு, குளிர்கால விளையாட்டுகள், தனித்துவமான ஐனு கலாச்சாரம் மற்றும் சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது இந்நகரம்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |