புகைவிட தொடங்கும் சீனா-தைவான் போர்: பீதியின் உச்சத்தில் ஜப்பான் மக்கள்!
உக்ரைன்-ரஷ்யா போரானது, தைவானை ஆக்கிரமிப்பதற்கான எண்ணங்களை சீனாவிற்கு தரலாம் என ஜப்பான் மக்களை கவலையடைய வைத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் அண்டை நாடான தைவான் மீது சீனா போர் தொடுக்கும் அபாயம் அதிகரித்து இருப்பதாக ஜப்பான் மக்கள் பெரும்பாலானோர் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு சீன கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான் சீனா பிராந்திய தகராறு நீண்ட காலமாக நிலவி வருகிறது, அதிலும் குறிப்பாக தைவானுடன் பாதுகாப்பு உறவில் நெருக்கமாக இருக்கும் ஜப்பானுக்கு சீனாவின் நெருக்கடி இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது.
இந்தநிலையில், ஜப்பானின் கியோடோ நியூஸ் நடத்திய ஆய்வின்படி, உக்ரைன் ரஷ்யா போரை அடிப்படையாக கொண்டு, தைவான் அல்லது கிழக்கு சீன கடலில் உள்ள தீவுகளுக்கு எதிராக சீனா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நான்கில் மூன்று 4/3 ஜப்பானியர்கள் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு எதிராக ஜப்பான் எடுத்துள்ள பொருளாதார தடைகளுக்கு 86 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், இதனால் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதைப்போன்று சனிக்கிழமை மைனிச்சி செய்தித்தாள் மற்றும் சைட்டாமா பல்கலைக்கழகத்தின் சமூக ஆய்வுகுழு வெளியிட்ட ஆய்வு முடிவு, பத்தில் ஒன்பது ஜப்பானியர்கள் தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனுக்கு குண்டு துளைக்காத உடைகளை அனுப்பும் கிஷிடா அமைச்சரவையின் முடிவு சரியானது என 61 சதவீத பொதுமக்களும் 11 சதவிகித மக்கள் உக்ரைனுக்கு ஜப்பான் உதவி தேவையில்லை எனவும் கருது தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரபல ஐரோப்பிய நாட்டிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல்.. ரஷ்யா வெளியிட்ட வீடியோவில் அம்பலம்