அமெரிக்க லீக் தொடருக்காக…இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட பிரபல வீரர்
அமெரிக்க லீக் தொடரில் விளையாடுவதற்காக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து அணியில் இருந்து விலகும் ஜேசன் ராய்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் லாஸ் ஏஞ்செல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டு விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு 300,000 பவுண்ட் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
England board confirms Jason Roy has given up his remainder of the incremental contract. pic.twitter.com/I8IPwGb9cb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2023
இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார்.
இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தற்போது உறுதி செய்துள்ளது.
ஜேசன் ராய் விளக்கம்
இதற்கிடையில் தனது முடிவு குறித்து பேசியுள்ள ஜேசன் ராய், நான் எப்போதும் இங்கிலாந்து அணியை விட்டு விலக மாட்டேன், நாட்டுக்காக விளையாடுவது என்றும் தனக்கு பெருமையான காரியம் என்றும் தெரிவித்துள்ளது.
Jason Roy puts a full stop on speculation about him signing a million-dollar contract with Los Angeles Knight Riders.#JasonRoy #ECB #MLC pic.twitter.com/gIhUX82S8R
— CricTracker (@Cricketracker) May 25, 2023
ஜேசன் ராய் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 5980 ஓட்டங்கள் குவித்துள்ளார்.