CSK அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கேப்டன்..கொல்கத்தாவுக்கு வெற்றி தேடித்தந்த இருவர்
சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
கௌரவ ஸ்கோருக்கு உதவிய ஷிவம் தூபே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பாடி 144 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் தூபே 48 ஓட்டங்களும், கான்வே 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
??????????!@IamShivamDube continued his fine form with the bat in the season and remained unbeaten on 48* ??#TATAIPL | #CSKvKKR pic.twitter.com/zq5ctr6qSh
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க விக்கெட்டுகளை தீபக் சஹார் கைப்பற்றினார். குர்பாஸ் (1), ஜேசன் ராய் (12) மற்றும் வெங்கடேஷ் அய்யர் (9) ஆகியோர் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
@IPL (Twitter)
வெற்றிக் கூட்டணி
அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் இருவரும் நங்கூரம்போல் நின்று ஆடினர். இவர்களது கூட்டணியை பிரிக்க சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் போராடினர்.
அணியின் ஸ்கோர் 132 ஓட்டங்களை எட்டியபோது அரைசதம் அடித்த ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
@KKRiders (Twitter)
பவுண்டரி அடித்து வெற்றி
பின்னர் வந்த ரஸல் 2 ஓட்டங்கள் எடுக்க, மறுமுனையில் அரைசதம் அடித்த ராணா பவுண்டரி அடித்து வெற்றியை நிலைநாட்டினார். கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
நிதிஷ் ராணா 44 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திற்கு முன்னேறியது.
@IPL (Twitter)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 20ஆம் திகதி எதிர்கொள்கிறது.
@IPL (Twitter)
@IPL (Twitter)