ரிங்கு ரிங்குன்னு ரசிகர்கள் கோஷம்: ரொம்ப பெருமையா இருக்கு - நிதிஷ் ராணா நெகிழ்ச்சி
ரிங்கு, ரிங்கு என்று ரசிகர்கள் மைதானத்தில் கோஷம் போடுவது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
கேப்டன் நிதிஷ் ராணா நெகிழ்ச்சி உரை
நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், பஞ்சாப் கிங் அணியும் மோதிக் கொண்டது. இப்போட்டியின் முடிவில், 5 விக்கெட் இழந்து 182 ஓட்டங்களை எடுத்து பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி தோற்கடித்தது.
ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் நிதிஷ் ராணா எடுத்துக் கொண்டதால் இவருக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் கொல்கத்தா மைதானத்தில் விளையாடிய போது ரசிகர்கள் மைதானத்தில் எழுந்து ‘ரஸல் ரஸல்’ என்று கோஷமிட்டனர்.
இந்த கோஷம் மைதானத்தையே அதிர வைத்தது. ஆனால், இப்போது ரசிகர்கள் ‘ரிங்கு ரிங்கு’ என்று கோஷமிடுகின்றனர். இது பார்க்க நல்லாத்தான் இருக்கு. மிகவும் பெருமையாக இருக்கு. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் ரசிகர்களின் மனதை வென்று விட்டார். அவர்களின் மரியாதையையும் பெற்று விட்டார். இதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றார்.
Nitish Rana describes Rinku Singh's beautiful journey.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 8, 2023
From 'Russell Russell' to 'Rinku Rinku'. pic.twitter.com/emZlTaubge