இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்
Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் உள்ளூர் நேரப்படி 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.
சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது இந்த நிலநடுக்கம், ஜகார்த்தா, சுமத்ரா உட்பட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த நிலநடுக்கம் சற்று வித்தியாசமானது என அழைக்கப்படுகிறது.
அதாவது, நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் எத்தனையாக பதிவாகிறது என்பதுடன், எவ்வளவு ஆழத்தில் உருவாகிறது என்பதும் முக்கியம்.

இன்று உருவான நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானாலும், பூமியின் பரப்புக்குக்குக் கீழே 376 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
இதுபோல் அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் நில அதிர்வுகள், பொதுவாக நிலப்பரப்பை அடைவதற்குள் அவற்றின் ஆற்றல் வெகுவாகக் குறைந்துவிடும்.
அதனால், அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அபாயம் இல்லை என்று கூறிவிடமுடியாது, இதே அழவில் ஆழம் குறைந்த இடத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வுகளை ஒப்பிடும்போது, ஆழம் அதிகமான இடங்களில் ஏற்படும் அதிர்வுகள் வித்தியாசமாக இருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!