வாயில் வைத்ததும் கரையும் ஜவ்வரிசி கேரமல் புடிங்: ரெசிபி இதோ
புடிங் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு உணவாகும்.
உணவு சாப்பிட்ட பின் ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் புடிங் செய்து சாப்பிடலாம்.
அந்தவகையில் வீட்டில் உள்ள குறைந்தளவு பொருட்களை கொண்டு சுவையான ஜவ்வரிசி கேரமல் புடிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1/2 லிட்டர்
- சர்க்கரை- 175g
- ஜவ்வரிசி- 1/4 கப்
- முட்டை- 2
- வெண்ணிலா எசன்ஸ்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதித்து வந்ததும் அதில் 100g அளவிற்கு சர்க்கரை சேர்த்து கலந்து அடுப்பை அனைத்து ஆறவைக்கவும்.
பின் ஒரு பவுலில் ஜவ்வரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் ஜவ்வரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
ஜவ்வரிசி வெந்ததும் அதனை தனியாக எடுத்து குளிர்ந்த நீரால் அலசி எடுத்துக்கொள்ளவும். அடுத்து காய்ச்சிய பாலில் வேகவைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலந்துவிடவும்.
பின் ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து அதில் ஜவ்வரிசி போட்ட பாலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
கேரமல் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 75g சர்க்கரை 3 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து தேன் நிறம் வந்ததும் அடுப்பை அனைத்து கொள்ளவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கேரமல் சேர்த்து ஆறியதும், முட்டையுடன் கலந்து வைத்துள்ள பால் சேர்த்து ஒரு தட்டு அல்லது அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடவும்.
அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து புடிங் கலவை தயார் செய்துவைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து மூடவும்.
இதனை 25 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவைத்துகொள்ளவும். பின் இறக்கி ஆறியதும் வெட்டி பரிமாறினால் சுவையான ஜவ்வரிசி கேரமல் புடிங் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |