ஒரு கப் ஜவ்வரிசி இருந்தால் போதும்.., 10 நிமிடத்தில் மொறுமொறு வடை செய்யலாம்
வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வடை.
அதுவும், மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், 10 நிமிடத்தில் உடனடியாக மொறுமொறு ஜவ்வரிசி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி- ½ கப்
- உருளைக்கிழங்கு- 1
- வேர்க்கடலை- ¼ கப்
- கடலை மா- 2 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 1
- சீரகம்- ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி சேர்த்து 2-3 முறை நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, ஒன்றும் பாதியாக அரைத்த வேர்க்கடலை சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து இதில் கடலை மா, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிணைந்துகொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து மாவை வடை போல் தட்டி பொறித்து எடுத்தால் சுவையான ஜவ்வரிசி வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |