கிளாசிக் 350-க்கு போட்டியாக Jawa 350 Legacy Edition அறிமுகம்
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Jawa Yezdi Motorcycles நிறுவனம் Jawa 350 மோட்டார்சைக்கிளின் Legacy Edition மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இது கிளாசிக் ஜாவா 350-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த பைக்கின் 500 யூனிட்களை மட்டுமே நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
லெகசி பதிப்பில் Factory-fitted touring accessories பயன்படுத்தப்பட்டுள்ளன. இது touring visor, pillion backrest மற்றும் crash guard ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது தவிர, லெதர் கீசெயினுடன் கூடிய ஜாவா 350-இன் collector's edition miniature மாடலையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.
இந்த பைக் 6 வண்ணத் தேர்வுகளில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் Deep Forest, Grey மற்றும் Obsidian Black with chrome elements, Black, Mystic Orange, Maroon மற்றும் Solid வண்ணங்கள் அடங்கும்.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |