பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ‘Gamechanger' விருது பெற்றார்
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ‘Gamechanger' என்ற விருது பெற்றுள்ளார்.
யார் இந்த ஜெய்ஷா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே மகன்தான் இந்த ஜெய்ஷா. இவர் இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலில் ஜெய்ஷா குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து, தற்போது பி.சி.சி.ஐ-யின் செயலாளர் பதவி ஏற்றார். இவரை பி.சி.சி.ஐ-க்குள் கொண்டு வந்தது வேறு யாரும் இல்லை.
முன்னாள் கிரிக்கெட் சங்கப் பொறுப்பாளரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான அருண் தாக்கூர்தான். வரும் செப்டம்பர் மாதம் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நடக்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஜெய்ஷா திட்டவட்டாக தெரிவித்தார்.
@B5001001101
இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொங்கி எழுந்தது. இவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)யின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
@mufaddal_vohra
விருது பெற்ற ஜெய்ஷா
இந்நிலையில், ‘Gamechanger' என்ற விருதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பெற்றுள்ளார்.
CNBCTV18 செய்தி ஒரு விருது விழா நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்கு ‘Gamechanger’ என்ற விருது வழங்கி கவுரவித்தது
இது குறித்து பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், முன் எப்போதும் இல்லாத உச்சத்திற்கு இந்திய கிரிக்கெட்டை கொண்டு சேர்த்த பிசிசிஐ தலைமைக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளது.
Jay Shah won the Gamechanger Award at the CNBCTV18 IBLA awards. pic.twitter.com/4DUavVbh4Q
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2023