கட்சி தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தும் ஆடியோ! சசிகலா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு கருத்து
அதிமுக-வை பிளவுபடுத்த வேண்டும் என்கிற சசிகலாவின் சூழ்ச்சி பலிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
எனினும், நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சசிகலா அதிமுக உறுப்பினர் கூட இல்லை.
பின் எப்படி அவர் உரிமை கோர முடியும். முன் அவர் அரசியலிருந்து விலகுவதாக கூறினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு நல்ல வாக்கு வங்கி கிடைத்தது.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் சிறப்பாக செயல்படுகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என சசிகலா எதிர்பார்த்தார்.
அதிமுக-வில் எடுபடாத பிரித்து ஆள வேண்டும் என்ற கொள்கையை சசிகலா பின்பற்றுகிறார். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுக சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.