ஜெயலலிதா முதல் சரத்குமார் வரை! நாடாளுமன்றத்தில் கால் பதித்த சினிமா பிரபலங்கள்
நாடாளுமன்றத்தில் ஜொலித்த சினிமா துறை பிரபலங்களை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜெயலலிதா
சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு நுழைந்து தமிழகத்தையே ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. இவருக்கென்று தனி மக்கள் கூட்டம் உண்டு.
இவர், தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளரும் ஆவார். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார்.
வைஜெயந்தி மாலா
இந்திய சினிமாவில் நடிகை வைஜெயந்தி மாலா தமிழ் திரை உலகில் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றாலும், பாலுவுட்டில் கால் பதித்தார்.
இவர், 1984 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு ஜனதா கட்சி தலைவர் இரா.செழியனை தோற்கடித்து எம்பி ஆனார்.
இதனைத்தொடர்ந்து, 1989 -ம் ஆண்டு அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணாவை தோற்கடித்து எம்பி ஆனார்.
ஜெயபிரதா
இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெயப்பிரதா, 1993 -ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதன்பின்னர், 2004 மற்றும் 2009 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நெப்போலியன்
தமிழ் திரைப்பட நடிகர் நெப்போலியன், 2009 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார்.
அதோடு, மத்திய காங்கிரஸ் கூட்டணியில் சமூகநீதி துறையில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ராமராஜன்
மக்கள் நாயகன் என்று அழைக்கப்படும் ராமராஜன், 1998 -ம் ஆண்டு தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
சரத்குமார்
தற்போது, சினிமா மற்றும் அரசியலில் வலம் வரும் சரத்குமார் 2001 -ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்னர், 1998 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |