ஜெயலலிதா பிறந்தநாள் விழா.., மரியாதை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
முக்கிய இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், போயஸ் கார்டனில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |