ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை துல்லியமாக கணித்த ஜோதிடர்! தமிழக அரசியலும் ஜோதிடமும்: ஒரு பார்வை

predicted Astrologer Jeyalalitha's political career
By Balakumar Mar 11, 2021 09:52 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.

188 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 61 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணியில் (ஜனநாயக மக்கள் கூட்டணி) இடம்பெற்ற மதிமுக 6 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெற்று, மொத்தம் 69 இடங்கள் மட்டுமே, அக்கூட்டணிக்கு கிடைத்தன.

திமுக கூட்டணியில் (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 67 இடங்களிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கலைஞர் முதலமைச்சரானார்.

அழைத்து வாருங்கள் அந்த ஜோதிடரை..’ என்று ஜெயலலிதா உத்தரவிட, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்த நாளன்று, அதிமுக மாவட்டச் செயலாளர் ஒருவர், ஜோதிடர் ஜமால் ஜாகிப் வீட்டுக் கதவைத் தட்டினார்.

டாக்டர் வெங்கடேஷின் அம்மா சந்தானலட்சுமி மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான, இஸ்லாமியரான ஜமால் சாகிப், ‘சரவணன்’ என்றே ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டார்.  

அவர் முன்னால் போய் நின்றார் சரவணன். ‘60லிருந்து 65 வரும்னு சொன்னீங்க. மொத்தம் 69 இடங்களில் வந்திருக்கிறோம். இந்த அளவுக்கு துல்லியமாக உங்களால் எப்படிச் சொல்ல முடிந்தது?’ என்று ஜெயலலிதா கேட்க, ‘எனக்கு ஜோசியம்தான் சொல்லத் தெரியும்.

பொய் சொல்லத் தெரியாது’ என்றிருக்கிறார் சரவணன். விருதுநகரைச் சேர்ந்த ஜமாலின் குடும்பத்தில், ஒவ்வொரு தலைமுறையிலும், ஒருவர் மட்டுமே ஜோதிடராக இருந்துள்ளனர்.  

இவர், ஏழாவது தலைமுறை ஜோதிடர் ஆவார். 2006 தேர்தல் கணிப்பு குறித்து அவர் ‘உலகத்தில் எத்தனையோ பெருமாள் கோவில்கள் உள்ளன? ஏன் திருப்பதியில் மட்டும் உண்டியல் வசூல் கோடி கோடியாகக் கொட்டுகிறது? எல்லாம் நேரம்தான்! மிகச் சிறப்பான ஒரு நல்ல நேரத்தில் திருப்பதி கோவிலைத் தொடங்கியதுதான்! அதுபோல, ஒவ்வொரு கட்சிக்கும் ஆரம்பித்த நாளும் நேரமும் உண்டு. அதிமுக உருவானது மகர ராசியில்.

அந்தக் கட்சியின் பிறந்த (அறிவிக்கப்பட்ட) நாளையும் நேரத்தையும், கட்சித் தலைமை பிறந்த நாளையும் நேரத்தையும், தேர்தல் நடைபெறும் நாளையும் ‘மேட்ச்’ செய்தேன். எல்லாமே ஜோதிட கணிதம்தான்’ என்று விளக்கியிருக்கிறார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியோடு அதிமுக கூட்டணி அமைத்தது தோல்விக்கான பிரதான காரணமாக, ஜோதிட ரீதியாக ஜெயலலிதாவிடம் விவரிக்கப்பட்டது. அதனால், அதிமுகவோடு நட்பு பாராட்டி வந்த அந்தக் கட்சியை, 2011 தேர்தலில் எப்படியாவது கழற்றிவிட வேண்டும் என்று ஜோதிட ஆலோசனை சொல்லப்பட்டது.

மிகக் குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கினால், அந்தக் கட்சி தானாகவே முறைத்துக்கொண்டு போய்விடும் என்பதை அறிந்தே, அந்தக் கட்சியிடம் தொகுதிப் பங்கீட்டின்போது வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்தி, கூட்டணியிலிருந்து விலகச் செய்தனர். அக்கட்சியின் தலைமையை, அதிமுக கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதால், அந்தத் தேர்தலை அக்கட்சி புறக்கணிப்பு செய்து, கோபத்தை தணித்துக்கொண்டது.

அந்த 2011 தேர்தலில், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளும் 203 இடங்களில் வென்று ஜெயலலிதா முதலமைச்சரானாலும் கூட, 27-09-2014-ல் கர்நாடக சிறப்பு நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருட சிறைத்தண்டனை விதித்தது. அதனால், அவருடைய எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு, முதலமைச்சர் பதவியை இழந்தார்.

அந்த 27-ஆம் தேதி நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கவிருக்கும் தீர்ப்பு தனக்கு சாதகமாகத்தானே இருக்கும்? என்று முன்கூட்டியே ஜோதிட ஆலோசனை கேட்ட ஜெயலலிதாவிடம், ‘இந்த நாள் உங்களுக்கு நன்றாக இல்லை. எலியைப் பிடிக்கிற மாதிரி உள்ளே பிடிச்சு போட்ருவாங்க..’ என்று சரவணன் கூற, ‘மோடி என்னுடைய பிரதர். அப்படியெல்லாம் நடக்காது..’ என்று ஜெயலலிதா சிரித்திருக்கிறார். ‘அதெல்லாம் மோடியா? இந்த லேடியா? என்று நீங்கள் பேசுவதற்கு முன்பு வரையிலும்தான்.. இந்த நாளில் நீங்கள் சிறைபுக வேண்டியிருக்கும்?’ என்று சரவணன் சொல்ல.. அந்தக் கணிப்பை அலட்சியம் செய்தார்.

அவர் சொன்னது போலவே ஜெயலலிதா (பெங்களூரு) சிறையில் அடைக்கப்பட, ‘எந்த நாளில் பிணையில் வெளிவர முடியும்? எந்த நாளில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலை கிடைக்கும்?’ என்பதை, சிறைக்கே சென்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார் சரவணன். மேல்முறையீட்டில், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை 2015-ல் நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்துவிட, விடுதலையானார் ஜெயலலிதா. கணிப்பு பிரகாரம் எல்லாம் நடந்துவிட, ஜெயலலிதாவுக்கு ஜோதிடத்தின் மீதிருந்த நம்பிக்கை பன்மடங்கு அதிகமானது.

சிறைத்தண்டனை, விடுதலை என அரசியல் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்ட நிலையில், 2016 தேர்தலை வேறு ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழகத்தில் 5 வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் பழகிவிட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கடும் விமர்சனத்துக்கு ஆளான தன்னை எப்படி 2016-லும் தொடர்ந்து முதலமைச்சர் நாற்காலியில் அமரவைப்பார்கள்? என உள்ளுக்குள் ஜெயலலிதாவுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ‘என்ன செய்தால் மீண்டும் ஆட்சியை அதிமுகவால் கைப்பற்ற முடியும்?’ என்று சரவணனிடம் ஜோதிட ஆலோசனை கேட்டார்.

‘இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்தவொரு பிரதான கட்சியும், செய்யாத ஒரு காரியத்தை, இந்தத் தேர்தலில் நீங்கள் செய்ய வேண்டும்?’ என்று சரவணன் கூற, சசிகலா அதிர்ந்தார். ‘அக்கா.. நீங்களும் சரவணனுமாச்சு..’ என்று பின்வாங்கினார்.

இதனால் 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அப்படி என்ன செய்தார்? என்பதை தமிழ்நாட்டு அரசியலும் ஜோதிடமுமில் அடுத்து பார்ப்போம்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US