இது என்ன நகைச்சுவையா? எல்லோரும் பதவி விலக்கிவிட்டு வீட்டில் இருக்க முடியுமா? கொந்தளித்த ஜெயவர்த்தனே
இலங்கையில் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தீர்மானித்துள்ளதற்கு கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகிய நிலையில், புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்ய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இம்தியாஸ் பாக்கீர் இருவரும் போட்டியிட்டனர். அதில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெற்றி பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார். ஆனால் அவர் மீண்டும் பதவி விலகுவதாக அறிவித்ததுடன், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே இந்த விடயத்திற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ' இது என்ன நகைச்சுவையா? தற்போதைய நெருக்கடியான சூழலில் அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயம் இந்த நியமனம் என்பது போல் நேரமும், பணமும் வீணடித்துள்ளனர். மேலும் அவர் மீண்டும் பதவி விலகுகிறார்.
அனைவரும் இலங்கை பாராளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருக்க முடியுமா #GoHomeGota' என தெரிவித்துள்ளார்.
Is this a joke? time and money wasted as if this appointment was the most pressing matter they had to do in this current crisis and he resigns again 🤦♂️ can everyone @SLparliment resign and stay home please 🙏🏻 #GoHomeGota https://t.co/d8rylAg5e7
— Mahela Jayawardena (@MahelaJay) May 6, 2022