ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் இந்திய வீரர்: டெஸ்ட் இறுதிப் போட்டியில் இடம் பெறுவதில் சந்தேகம்!
இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ அணி வீரர் ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உனத்கட் விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடையிலான இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த லக்னோ அணி பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் சமநிலையை இழந்து கீழே விழுந்தார்.
Jaydev Unadkat gets injured while practising! Speedy recovery to the bowler who is also part of the WTC squad!@JUnadkat @BCCI #JaydevUnadkat #WTCFinal #WTCFinal2023 #Cricket #testcricket #SportsTakpic.twitter.com/CT8sqOPbOm
— Sports Tak (@sports_tak) May 1, 2023
இந்நிலையில் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து ஜெய்தேவ் உனத்கட் விலகியுள்ளார்.
டெஸ்ட் உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இந்திய கிரிக்கெட் அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணிக்கு மற்றொரு பின்னடைவு
லக்னோ அணியின் முந்தைய போட்டியில் கேப்டன் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது, இதனால் சென்னை அணியுடனான போட்டியில் அவரால் களமிறங்க முடியவில்லை.
தற்போது ஜெய்தேவ் உனத்கட் தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறி இருப்பது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.