நடுவானில் வந்த அதிர்ச்சி தகவல்... அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்! வெளியான முழு பின்னணி
குவைத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென துருக்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் இருந்து Jazeera ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்ட சில நேரத்தில் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து, விமானம் உடனடியாக துருக்கி Trabzon விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்து முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
Jazeera ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் Trabzon விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை Trabzon கவர்னர் Ismail Ustaoglu ஊடங்களிடம் உறுதிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து Jazeera ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
பின் தகவலை மதிப்பீடு செய்யப்பட்டதில் அது நம்பகமானதாக கருதப்படவில்லை.
இருப்பினும், மிகுந்த எச்சரிக்கையுடன், எங்கள் பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பதற்கான பணியில் குவைத் மற்றும் மற்றும் எங்கள் நெட்வொர்க்கைச் சுற்றியுள்ள அதிகாரிகளுடன் Jazeera ஈடுபட்டது.
முன்னெச்சரிக்கையாக அனைத்து விமானங்களுக்கும் கூடுதல் சோதனை நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன என Jazeera ஏர்வேஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Jazeera-வின் பாதுகாப்பு குழு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்த நேரத்தில் பயணிகள் சந்தித்த தாமதங்களுக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை, அந்த நேரத்தில் செயல்பட்ட அனைத்து குவைத் விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.