ஈரானுக்குள் நுழையும் சர்வதேச அணுசக்தி முகமை: ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்தம்: ஜே.டி வான்ஸ் உறுதி
அணுசக்தி ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்கு பயணம் மேற்கொள்வது உறுதி என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜே.டி வான்ஸ் வழங்கிய முக்கிய தகவல்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ்(JD Vance) NBC செய்தி நிறுவனத்திற்கு அழித்த பேட்டியில், அணுசக்தி ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்குள் நுழைவது உறுதி என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தின் விட்டுக் கொடுக்க முடியாத அம்சமாக இருக்கும் அணுசக்தி விவகாரம் தொடர்பில், சர்வதேச அணுசக்தி முகமையின்(IAEA) ஆய்வாளர்கள் மீண்டும் ஈரானுக்கு பயணம் செய்து ஆய்வை மேற்கொள்வார்கள் என வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிகாரிகளும், IAEA ஆய்வாளர்களும் இணைந்து, ஈரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிக்கும் பணியை கண்காணிப்பார்கள் என்று விளக்கியுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், இது தெளிவாக இடம் பெற்று இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மை
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி கே.டி வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையொப்பம் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.
FOX செய்தி நிறுவனத்திற்கு வான்ஸ் அளித்த நேர்காணலின் போது, வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தம் தொடர்பான நகலை பொதுவெளியில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |