ட்ரம்ப் தொடர்பிலான கடிதம் "அபத்தமானது"! பகிரங்கமாக மறுத்த ஜேடி வான்ஸ்
எப்ஸ்டீனுக்கு ஜனாதிபதி ட்ரம்பின் பிறந்தநாள் அட்டையை வழங்கியதாக, வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் கூறும் கூற்றுகளை ஜே.டி.வான்ஸ் போலியானது என நிராகரித்துள்ளார்.
பாலியல் குற்றவாளி
அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவருக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறந்தநாள் அட்டை வழங்கியதாக வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் (WSJ) கூறியது.
இதுதொடர்பாக WSJ வெளியிடும் முடிவை துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (J.D.Vance) "போலி" என பகிரங்கமாக மறுத்துள்ளார்.
மேலும், அந்தக் கடிதம் இருந்ததற்கான ஆதாரத்தை அந்த செய்தித்தாள் டிரம்பிடம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. WSJ அதை எங்களுக்குக் காட்டாது. கடிதம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.
டொனால்ட் ட்ரம்ப் எப்ஸ்டீனுக்கு கவிதைகள் எழுதுகிறார் என்ற கருத்து எனக்கு அபத்தமானது. மேலும் ஒரு பெரிய அமெரிக்க பத்திரிகை தாக்குதலுக்கான அடிப்படையை வெளிப்படுத்தாமல், அமெரிக்க ஜனாதிபதியைத் தாக்கும் என்பதும் அதே அளவு அபத்தமானது என்று நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |