அமெரிக்க ஜனாதிபதியாக தயார் என அறிவித்த ஜேடி வான்ஸ் - டிரம்பிற்கு என்ன ஆனது?
டிரம்ப்பிற்கு ஏதேனும் நேர்ந்தால் நான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார் என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.
டொனால்ட் டிரம்ப் உடல்நிலை
அமெரிக்கா ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம், டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.
79 வயதான டிரம்ப், 2வது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் டிரம்பின் கணுக்காலில் வீக்கம், கையில் காயம் இருந்தது புகைப்படத்தின் மூலம் தெரிய வந்ததும், அவரது உடல்நிலை குறித்து விவாதம் எழுந்தது.
அதனையடுத்து நடைபெற்ற பரிசோதனையில், CVF - Chronic Venous Insufficiency என்னும் நரம்பியல் நோய் இருப்பது தெரிய வந்தது.
ஆனால், இது வயதான நபர்களுக்கு வரும் பாதிப்பு தான், டிரம்ப் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருந்தாலும், டிரம்ப்பின் உடல்நிலை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜேடி.வான்ஸ் விளக்கம்
இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் டிரம்ப் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஜனாதிபதி டிரம்ப் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் தனது முழு பதவிக்காலத்தையும் தொடர்வார். அமெரிக்க மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்வார் என நம்புகிறேன்.
JUST IN—VP JD Vance said he is prepared to step in if “a terrible tragedy” were to befall Trump, while emphasizing that Trump is “in incredibly good health” and brimming with “incredible energy.”
— ADAM (@AdameMedia) August 28, 2025
Trump is sicker than we thought. pic.twitter.com/fX9uiauvtp
இருந்தாலும் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், நான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார். இந்த 200 நாட்கள் பணி அனுபவம் என்னை அதற்கு நன்றாக தயார்படுத்தியுள்ளது.
டிரம்ப் தனது அலுவலகத்தில் உள்ள பலரை விட வயதானவர். ஆனால் அவர்கள் அனைவரையும் விட தாமதாகவே உறங்க செல்கிறார். அனைவருக்கும் முன்னர் எழுந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |