நான் ரஷ்யர்களை சந்திக்க விரும்பவில்லை: ட்ரம்பின் திட்டத்தை தள்ளிப்போட்ட உக்ரைன் ஜனாதிபதி
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்போதே, தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று கூறியிருந்தார்.
ஆனால், அவரது திட்டம் ஒன்றை உக்ரைனும் ரஷ்ய தரப்பும் தள்ளிப்போட்டுவிட்டன.
ட்ரம்பின் திட்டத்தை தள்ளிப்போட்ட உக்ரைன் ஜனாதிபதி
ஜேர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற வருடாந்திர பாதுகாப்பு மாநாட்டின்போது, உக்ரைன் மற்றும் அமெரிக்க தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யா தனது பிரதிநிதிகளை அனுப்பும் என பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி, அப்படி ஒரு சந்திப்பு மியூனிக் நகரில் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அது நடக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனும் அப்படி ஒரு விடயம் நடக்கப்போவதில்லை என்று கூறிவிட்டன.
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யர்களுடன் பேசும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று கூறிவிட்டார்.
முதல் விடயம், நான் ரஷ்யர்களை மட்டும் சந்திக்கப்போவதில்லை என்று கூறிய ஜெலன்ஸ்கி, எதற்காக ரஷ்யாவை மட்டும் சந்திக்கவேண்டும்? அதற்கு ஒரு முறை உள்ளது, முதலில் அமெரிக்க தரப்பை சந்திக்கவேண்டும், ஐரோப்பாவை சந்திக்கவேண்டும், பிறகு, ரஷ்யா சந்திப்புக்கு தயாராகவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
ஆக, ட்ரம்பின் திட்டம் இப்போதைக்கு நிறைவேறவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். h |