பிரான்ஸ் பிரதமர் மீதான வழக்குகள் அனைத்தும் இரத்து: நீதிமன்றம் நடவடிக்கை
பிரான்சில் பிரதமர் Jean Castex மற்றும் சில அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த 20,000 வரையான வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்குகள் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் 31ம் திகதி வரையில் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டவையாகும்.
பிரதமர் Jean Castex, சுகாதார அமைச்சர் Olivier Véran, கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer ஆகியோர்கள் மீது இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.
கொரோனா பரவல் தொடர்பில் இவர்களின் செயற்பாடுகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் Cour de justice de la République நீதிமன்றம், எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அனைத்து வழக்குகளையும் இரத்துச் செய்துள்ளது.
பொதுமக்கள் அளித்துள்ள சுமார் 20,000 வழக்குகள் இந்த வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.