காதலியைப் பார்க்கும் ஆர்வத்தில் முகம் குப்புற விழுந்த அமேசான் நிறுவனர்
விண்வெளிக்குச் சென்று திரும்பிய தன் காதலியைப் பார்க்கும் ஆர்வத்தில் ஓடோடி வந்த அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் முகம் குப்புற விழுந்ததைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
முகம் குப்புற விழுந்த அமேசான் நிறுவனர்
60 ஆண்டுகளில் முதன்முறையாக பெண்களை மட்டுமே சுமந்துகொண்டு விண்வெளிக்குச் சென்ற ராக்கெட்டின் உரிமையாளரான அமேசான் நிறுவனரும் உலக கோடீஸ்வரருமான ஜெஃப் பெசோஸ், தர்மசங்கடமான ஒரு சூழலை சந்திக்க நேர்ந்தது.
விண்வெளிக்குச் சென்று திரும்பிய தனது காதலியான லாரன் சான்ச்சேஸைக் காண, இளம் காதலரைப்போல ஓடோடிவந்தார் ஜெஃப் பெசோஸ்.
விண்கலத்தின் ஜன்னல் வழியாக தன் காதலியைத் தேடிய பெசோஸ், அவரைக் காண்பதற்காக விண்கலத்தின் வாசலை நோக்கி ஓட, வழியில் தரையில் ஒரு பள்ளம் இருப்பதை அவர் கவனிக்கவில்லை.
ஓடிவந்த பரபரப்பில் அந்த பள்ளத்தில் கால்வைக்க, முகம் குப்புற விழுந்தார் பெசோஸ்.
அவர் கீழே விழுவதைக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |