கோடீஸ்வரரான அமேசான் நிறுவனருக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ். அவர் இந்த கோடையில் தன் காதலியை திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளன.
அமேசான் நிறுவனருக்குத் திருமணம்
அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், இந்த கோடையில் தன் காதலியான லாரன் சான்ச்சேஸை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரில், உலகிலேயே மிகப்பெரிய படகான 500 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய Koru என்னும் படகில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பெண் யார் தெரியுமா?
ஜெஃப் பெசோஸ் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணின் பெயர் லாரன் வெண்டி சான்ச்சேஸ்.
லாரன், பாட்ரிக் ஒயிட்செல் என்னும் அமெரிக்கத் தொழிலதிபரின் முன்னாள் மனைவி ஆவார்.
2018ஆம் ஆண்டு, ஜெஃப் தன் மனைவியாகிய மெக்கென்ஸி ஸ்காட்டுடன் வாழும்போதே ஜெஃப்புக்கும் லாரனுக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டது.
இந்த விடயம் வெளியாகி பெரும் சர்ச்சை உருவாக, ஜெஃப் தன் மனைவியை விவாகரத்து செய்தார், லாரன் தன் கணவரை விவாகரத்து செய்தார்.
2019 முதல் சேர்ந்து சுற்றத்துவங்கிய ஜெஃப் லாரன் ஜோடிக்கு 2023ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இந்த கோடையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |