The Hundred போட்டியில் இந்தியாவின் ஜெமிமா ஆட்டநாயகி: த்ரில் வெற்றி
இங்கிலாந்தின் The Hundred மகளிர் போட்டியில், சௌதர்ன் பிரேவ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தியது.
சன்ரைசர்ஸ் ஆல்அவுட்
லீட்ஸில் நடந்த The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 116 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரையோனி ஸ்மித் 48 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 23 ஓட்டங்களும் விளாசினர்.
ஜெமிமா ரோட்ரிகஸ்
பின்னர் ஆடிய சௌதர்ன் அணி 96 பந்துகளில் இலக்கினை எட்டியது. ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
ரன்அவுட் மற்றும் 42 ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்த ஜெமிமா ஆட்டநாயகி விருது பெற்றார்.
A great day out for Issy Wong! 🌟#TheHundred pic.twitter.com/v6Ko8pYu11
— The Hundred (@thehundred) July 25, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |