என்விடியா தலைவராக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்
jensen huang re appointed as chairman of nvidia: என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் என்விடியா தலைவராக ஜென்சன்
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் Nvidia, சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் ஆகும்.

Nvidia 4 ட்ரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டிய முதல் பொது வர்த்தக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்தவர் ஜென்சன் ஹூவாங் (jensen huang).
சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன், ஜென்சன் திருமணத்தை மீறிய நெருங்கிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த குற்றச்சாட்டுகளை ஜென்சன் ஒப்புக்கொண்ட ஜென்சன், 33 ஆண்டுகளாக வகித்து வந்த சிஇஓ மற்றும் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக அதன் நிதிப் பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ் நியமிக்கப்பட்டுள்ளார். என்விடியாவின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தது.
ஆனால், ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் தலைவர் பதவியில் நியமிக்க வேண்டும் என குரல் எழுந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஜென்சன் ஹூவாங்கை மீண்டும் என்விடியாவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அதன் இயக்குநர்கள் குழு நியமித்துள்ளது.
NVIDIA Board reinstates Jensen Huang as President, CEO and Board Director. Read the release: https://t.co/x4bnjiSVil
— NVIDIA Newsroom (@nvidianewsroom) November 23, 2026
அமெரிக்க அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஹுவாங் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்கு வருவது தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜென்சன் ஹுவாங், இயக்குநர்கள் குழுவின் முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 30 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது.