இந்திய வம்சாவளியினருக்காக ஏற்கனவே பதவியிலிருந்தவரை ராஜினாமா செய்ய கோரிய அமெரிக்காவின் புதிய அதிபர்
இந்திய வம்சாவளியினர் ஒருவரை பதவியிலமர்த்துவதற்காக, ஏற்கனவே பதவியிலிருந்த ஒருவரை ராஜினாமா செய்ய கோரியிருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன்.
அப்படி அதிபரால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அந்த இந்திய வம்சாவளியினர் யார்? அவரது பெயர் விவேக் மூர்த்தி!
விவேக் மூர்த்தியின் தாத்தா H.C. நாராயண மூர்த்தி, மைசூர் சர்க்கரை ஆலை, மற்றும் கர்நாடகா விக்ராந்த் டயர்ஸ் நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர் ஆவார்.
இந்திய அமெரிக்கரான விவேக் மூர்த்தி ஏற்கனவே ஒபாமா அதிபராக இருந்தபோதும், ட்ரம்ப் அதிபராக இருந்தபோதும் அமெரிக்க சர்ஜன் ஜெனரல் என்னும் பெரும் பொறுப்பிலிருந்தவர், பின்னர் ட்ரம்ப் அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.
இப்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஜோ பைடன், மீண்டும் விவேக் மூர்த்தியை அதே பதவியிலமர்த்த உள்ளார்.
அதற்காக, ஏற்கனவே அமெரிக்க சர்ஜன் ஜெனரல் பொறுப்பிலிருக்கும் Jerome Adams என்பவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஜோ பைடன்.
அமெரிக்காவில் இனி கொரோனாவைக் கட்டுப்படுத்தப்போவது இந்திய அமெரிக்கரான விவேக் மூர்த்திதான்!



