புளோரிடாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்: துணை விமானியாக பணியாற்றிய 20 வயதுப் பெண்
Jet Crash in Florida 20-Year-Old woman Copilot dead: புளோரிடாவில் நடந்த கோரமான சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்த 9 பேரில் ஒரு 20 வயது இளம் துணை விமானியும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து
தெற்கு புளோரிடாவில் சிறிய ரக விமானம் லியர்ஜெட் 60' (Learjet 60) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கப்பலில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சிக்கி உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பனாமா தீவை நோக்கி பறந்த லியர்ஜெட் 60, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) எஸ்டேட்டில் இருந்து 14 கி.மீ தொலைவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தினால் தரையில் பெருமளவு தீப்பிடித்து எரிந்தது. மேலும் விமானம் தரையில் விழுந்த போது தரையில் இருந்த ஒருத்தருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
20 வயது துணை விமானி
இந்நிலையில் விபத்துக்குள்ளான லியர்ஜெட் 60' விமானத்தில் துணை விமானியாக நதாலியா ஃபில்கேராஸ் (Nathalia Filgueiras) என்ற 20 வயது பெண் பணியாற்றியுள்ளார்.

இவர் தன்னுடைய 17வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான விமானி ஓட்டுநர் உரிமத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.