நடுவானில் மரணம்., பிரித்தானியாவிற்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
பிரித்தானியாவிற்கு பறந்துகொண்டிருந்த நிலையில் பயணி ஒருவர் உயிரிழந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெனரிஃபேவில் (Tenerife) இருந்து பிரித்தானியாவிற்கு புறப்பட்ட Jet2 விமானம் LS676-ல் பயணித்த 70 வயதிற்கும் மேற்பட்ட ஒருவர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அவசரமாக தரையிறங்கியது.
சம்பவம் எப்படி நடந்தது?
விமானம் பிப்ரவரி 14 அன்று இரவு 7:05 மணிக்கு டெனரிஃபேவிலிருந்து புறப்பட்டது.
பிரித்தானியாவின் நாட்டிங்காம் நோக்கி பயணித்த இந்த விமானம், பயணியின் உடல்நிலை மோசமானதைக் கண்ட குழுவினர் உடனடியாக அவசர மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டனர்.
பின்னர் விமானம் ஸ்பெயினின் சாண்டியாகோ-ரோசாலியா டி காஸ்ட்ரோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயணி விமான ஓடுதளத்திலேயே உயிரிழந்தார்.
Jet2 நிறுவனத்தின் அறிக்கை
Jet2 செய்தித் தொடர்பாளர், "மரண செய்தி மிகுந்த துயரமளிக்கிறது. அவர் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்தார்.
இந்த சம்பவம், விமானப் பயணங்களில் மருத்துவ அவசரநிலைகள் எவ்வளவு எதிர்பாராதவையாக ஏற்படலாம் என்பதைக் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Jet2 plane to UK emergency landing, Jet2 Flight UK