லண்டனில் யூத வழிபாட்டு தலத்தில் தீ வைப்பு தாக்குதல்: அடுத்தடுத்த முயற்சிகளால் அதிர்ச்சி
லண்டனில் யூத வழிபாட்டு தலத்தில் தீ வைப்பு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூத வழிபாட்டு தளம் மீது தாக்குதல்
வடமேற்கு லண்டனில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கென்டன் யுனைடெட் யூத வழிபாட்டு தலத்தில் தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக யூத வழிபாட்டு தலத்தின் மீது தீவைப்பு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீவைப்பு தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக சமூக பாதுகாப்பு அறக்கட்டளை தகவல் அளித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக வடமேற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள யூத தொண்டு நிறுவனம் மீது தீவைப்பு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த இரண்டு சம்பவங்களையும் யூத எதிர்ப்பு குற்றங்களாக வகைப்படுத்தி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last night yet another synagogue, this time in Kenton, was targeted in a cowardly arson attack. It follows the attack in Finchley on Wednesday and the attempted attack on what was the Jewish Futures building in Hendon on Friday night, making three Jewish sites attacked in London…
— Chief Rabbi Sir Ephraim Mirvis (@chiefrabbi) April 19, 2026
லண்டன் மேயர் கண்டனம்
இத்தகைய வெறுப்பு குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு சட்டத்தின் முழு பலத்துடன் சரியான தண்டனை பெற்று தரப்படும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் தன்னுடைய சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |