ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்! 492 ஓட்டங்கள் குவித்த அயர்லாந்து அணி
அயர்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஜெய சூர்யா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சதம் அடித்த அயர்லாந்து வீரர்கள்
இலங்கையின் கல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். இதில் அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சதமடித்துள்ளனர்.
End of the innings.
— Cricket Ireland (@cricketireland) April 25, 2023
Incredible from the team, we finish on 492 all-out.
Time for a bowl.
WATCH: https://t.co/uMsnHMi5xS
SCORE: https://t.co/epQHAclj0P
📸 @OfficialSLC | #BackingGreen ☘🏏 #SRIvIRE pic.twitter.com/Rn5Mugwnx7
மேலும் அதிரடியாக ஆடிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டுக்கர் 80 ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில் விஷ்வா ஃபெர்னாண்டோ பந்தில் போல்ட் ஆனார்.
5 விக்கெட் வீழ்த்திய வீரர்
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று அயர்லாந்து அணி 492 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.
End of the innings.
— Cricket Ireland (@cricketireland) April 25, 2023
Incredible from the team, we finish on 492 all-out.
Time for a bowl.
WATCH: https://t.co/uMsnHMi5xS
SCORE: https://t.co/epQHAclj0P
📸 @OfficialSLC | #BackingGreen ☘🏏 #SRIvIRE pic.twitter.com/Rn5Mugwnx7
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது.