மூன்று பிள்ளைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! வீடு திரும்பிய மனைவி அதிர்ச்சி
இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் 36 வயது நபர் தனது 3 பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து
ஜார்க்கண்ட் மாநிலம் குக்ரா பகுதியைச் சேர்ந்தவர் சனூல் அன்சாரி (36). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு சனூல் அன்சாரி தனது மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அண்டை வீட்டார் சந்தேகமடைந்து வீட்டில் பார்த்தபோது இது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற சமயத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |