திருமண மேடையில் கைவிட்ட மணமகன்..இப்போது எனக்கு கணவர் கிடைத்துவிட்டார் - பிரித்தானியப் பெண்
Jilted wales woman knot with her boyfriend: வேல்ஸைச் சேர்ந்த பெண்ணொருவர் திருமணம் நின்றதைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் கழித்து காதலரை கரம்பிடித்துள்ளார்.
வேல்ஸைச் சேர்ந்த 30 வயது பெண், திருமணத்தன்று மணமகன் தன்னை விட்டுச்சென்ற பிறகு 4 ஆண்டுகள் கழித்து, காதலித்து திருமணம் செய்துள்ளதை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.
30 வயது இளம்பெண்
பிரித்தானியாவின் வேல்ஸைச் சேர்ந்த கேலி ஸ்டெட் என்ற 30 வயது, காப்பீட்டுத் துறை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
2022-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருமண நாளன்று மணமகன் வராததால் கேலி மிகுந்த மனவேதனைக்குள்ளானார்.
திருமணத்திற்காக கேலி 12,000 பவுண்டுகள் செலவில் திட்டமிட்டிருந்தார். திருமண நிகழ்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அந்த நாளை தனியாகவே முன்னெடுத்துச் சென்றார்.

அவர் திருமண மண்டபத்தில் நடந்து சென்று, புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அந்நாளைக் கொண்டாடினார்.
பின்னர் தனது வழக்கமான வாழ்க்கையை தொடர்ந்த கேலி , 2024-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கால நண்பரான ரிச்சர்ட் பெரோட்டை (31) சந்தித்தார்.
காதலருடன் திருமணம்
இருவரும் காதலிக்கத் தொடங்க கடந்த நவம்பர் 13ஆம் திகதி, the Gower Peninsula-வில் உள்ள Fairyhill-யில் 156 விருந்தினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் குறித்து கேலி கூறுகையில், "கடந்த முறை என்னால் செய்ய முடியாமல் போன ஒரு விடயம் என்னவென்றால், என்னால் திருமண மண்டபத்திற்குள் நுழையவே முடியவில்லை. இப்போது அதை நினைத்தால் உற்சாகமாவும் இருக்கிறது, அதே சமயம் ஒருவித பதற்றமும் ஏற்படுகிறது.
ஆனால், ரிச்சர்ட் முற்றிலும் மாறுபட்டவர்; நான் அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் முழுமையாக நம்புகிறேன். அவருடன் இருக்கும்போது நான் இயல்பாகவும், நேர்மையாகவும் இருக்க முடிகிறது; எங்களுக்கு இடையே எந்த அந்தஸ்து வேறுபாடும் இல்லை. முழுமையான வெளிப்படைத்தன்மை மட்டுமே உள்ளது" என்றார்.
