பீச்சர் போனில் யுபிஐ பணப்பரிவர்த்தனை! சாத்தியப்படுத்திய ஜியோவின் புதிய மொபைல்
ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பட்டன் போனில் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது.
999 ரூபாய்க்கு 4ஜி மொபைல்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் 999 ரூபாய்க்கு 4ஜி இணைய வசதியுடன் கூடிய Jio Bharat V2 என்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ சிம் மட்டுமே பயன்ப்படுத்தக்கூடிய இந்த மொபைலை வாங்குவோருக்கு ஜியோ நிறுவனம் மிக அட்டகாசமான அம்சங்களையும் , வசதிகளையும், மற்ற மொபைல் நெட்ஒர்க் சேவைகளை விட மிகக் குறைந்த விலையில் அழைப்பு மற்றும் இணைய சேவைகளை வழங்குகிறது.
Jio
14ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ரூ.123-க்கு கிடைக்கும். பிற நெட்ஒர்க் சேவை வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது ஜியோவில் 30% தள்ளுபடியில் விலையில் மாதாந்திர சந்தா கிடைக்கிறது மற்றும் ஏழு மடங்கு அதிக டேட்டா கிடைக்கிறது.
UPI வசதி
விலை, இணைய சேவை, எல்லாவற்றையும் விட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இருந்த ஒரு அட்டகாசமான வசதியை ஜியோ இந்த புதிய பட்டன் போனில் கொடுத்துள்ளது.
அது தான் UPI வசதி. இதனை ஜியோ அதன் JioPay சேவையின்மூலம் சாத்தியமாகியுள்ளது. கையில் பட்டன் போன் வைத்திருக்கும் எளிய மக்களும் இனி UPI பணப் பரிவர்த்தனைகளை உபயோகிக்கமுடியும் என்பதே இதன் பொருள்.
இந்தியாவில் தற்போது 25 கோடி பேர் பட்டன் போன்களை பயன்படுத்துவதாக தஃவாள்கள் தெரிவிக்கின்றனர். அவர்களை இலக்காக கொண்டு ஜியோ இந்த வசதியை அத மிகக்கொறைந்த போனில் கொண்டுவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |