Jio-வின் புதிய புரட்சி: மாதம் ரூ400-க்கு AI கணினி
இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு புதிய வரலாறு எழுத ஜியோ நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான JioPC-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதம் மட்டும் ரூ/400-க்கே கிடைக்கும் இந்த Cloud அடிப்படையிலான கம்ப்யூட்டர், பாரிய முதலீடு இல்லாமல் ஒரு முழுமையான AI Ready Computing அனுபவத்தை வழங்குகிறது.
JioPC, உங்கள் எந்த TV ஸ்கிரீனையும் ஒரு சிறந்த கம்ப்யூட்டராக மாற்றும் வசதியை வழங்குகிறது.
ஒரு Jio Set-Top Box, கீபோர்டு மற்றும் மவுஸ் மட்டும் இருந்தால் போதும். இதில் இன்ஸ்டன்ட் பூட்-அப், வேகமான செயல்திறன், மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
ஜியோவின் JioFiberமற்றும் AirFiber சந்தாதாரர்களுக்கு முதல் மாதம் இலவசமாக இந்த சேவையை வழங்குகிறது.
கணினி வாங்க வேண்டிய அவசியம் இல்லை
JioPC என்பது ஒரு cloud-based virtual desktop. அதனால், இதில் hardware maintenance, slow-down, updates போன்ற பிரச்சினைகள் இல்லை. பயனர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றக்கூடிய பிளான்கள் வழங்கப்படுகின்றன, நீண்டகாலக் கட்டுப்பாடுகள் இல்லாமல்.
AI மற்றும் கிரியேட்டிவிட்டி
JioPC-யில் AI tools, Adobe Express ஆகியவை முன்னிலையாகவே உள்ளன. அதேபோல Microsoft Office browser பதிப்பு மற்றும் 512 GB cloud storage-ஐ வழங்குகிறது. மாணவர்கள், தொழில்முனைவோர், மற்றும் வியாபாரிகளுக்கு இது ஒரு அற்புதமான டிஜிட்டல் கருவியாக இருக்கும்.
எளிதாக அமைக்கும் முறை
- Jio Set-Top Box-ல் JioPC செயலியைத் திறக்கவும்
- Get Started கிளிக் செய்யவும்
- Keyboard, Mouse இணைக்கவும்
- Jio எண்ணுடன் Log-in செய்யவும்
- புதிய cloud computer தயாராகும்!
இந்த முயற்சி, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை வேகப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக விளங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
JioPC launch India, Jio cloud computer Rs 400, JioPC AI tools, Reliance Jio PC 2025, Affordable AI computer India, Jio virtual desktop setup, JioPC for students, Cloud PC India, Digital India Jio device, Jio Set Top Box computer