சென்னை மாநகராட்சி சுகாதார துறையில் ஏராளமான வேலைவாய்ப்பு
சென்னை பெருநகரத்தில் பொது சுகாதார மருத்துவ துறைகளில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை செவிலியர் மற்றும் பேறுகால பணியாளர் (ANM), மாவட்ட ஆலோசகர் (தரம்), புரோகிராம் மற்றும் நிர்வாக உதவியாளர், சைக்காலாஜிஸ்ட், சமூக பணியாளர், மருத்துவ பணியாளர் (Multipurpose Health Worker), பாதுகாவலர் என மொத்தம் 7 பணிகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.
ANM பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அரசு அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரியில் இருந்து ANM/GNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமூக பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்பதுடன் இத்துறையில் அனுவமுடையவராயிருத்தல் வேண்டும்.
மருத்துவ பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு வரை கற்றவராயிருத்தல் அவசியம். இது குறித்த மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை The Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Building, Chennai-600003 என்ற முகவரிக்கு தேவையான கல்வி சான்றுகள், பணி அனுபவம் ஆகியவற்றின் நகலுடன் இணைத்து எதிர்வரும் 29.09.2023 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
வயது எல்லை
அனைத்து பணியிடங்களுக்கும் 45-வயதுக்கு குறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
சம்பள விபரம்
ANM - பணிக்கு மாதம் ரூ. 14 000
மாவட்ட ஆலோசகர் பணி: ரூ. 40 000
புரோகிராம் & நிர்வாக உதவியாளர்: ரூ. 12 000
சைக்காலாஜிஸ்ட் பணி; ரூ.23000
சமூக பணியாளர்: ரூ.23,800
மருத்துவ பணியாளர்; 5000
பாதுகாவலர்: ரூ. 6,300
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஒப்பந்த காலம் 11 மாதம் ஆகும். ஒரு மாதம் முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டு எப்போது வேண்டும் ஆனாலும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பொதுசுகாதாரத்துறையை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 2561 9330, 044 - 2561 9209