பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு, விசா அனுமதி, சம்பளம் உட்பட முழுமையான தகவல்
உலகின் முன்னணி நிதி, வணிக மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றான பிரித்தானியாவில் தோராயமாக 831,000 வேலை வாய்ப்புகள் உள்ளன, சராசரி ஆண்டு சம்பளமாக ஒரு முழு நேர ஊழியர்கள் 37,430 பவுண்டுகள் வரையில் பெறுகின்றனர்.
Skilled Worker விசா
தொழில், அனுபவம் மற்றும் இருப்பிடம் போன்ற காரணிகளைப் பொறுத்து சம்பளம் பரவலாக மாறுபடும், லண்டன் நகரம் பொதுவாக அதிக ஊதியத்தை வழங்குகிறது. சர்வதேச நிபுணர்கள் பிரித்தானியா வேலை விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் பணிபுரியலாம். தகுதியுள்ள நிபுணர்கள் பிரித்தானியாவில் பணிபுரிய Skilled Worker விசாவைப் பெறலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, கோவிட் பெருந்தொற்றை எதிர்கொண்ட பிறகும், மிகவும் வலுவான பொருளாதாரங்களில் ஒன்றாக இங்கிலாந்து இருப்பதைக் கருத்தில் கொண்டு, பிரித்தானியாவின் பணி அனுமதி என்பது உலகளவில் திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் ஒரு பாதையாகும்.
பிரித்தானியாவில் வேலை செய்வதால், நாட்டிலேயே உயர்தர சுகாதார அமைப்பான NHS உங்களுக்கு இலவசமாக அல்லது அதிக மானிய விலையில் மருந்துகளை வழங்குகிறது. பிரித்தானியாவில் வசிக்கும் அனைத்து சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களும் தங்கள் பிள்ளைகளை இலவசக் கல்வியை வழங்கும் ஒரு பொதுப் பள்ளிக்கு அனுப்பலாம். பிரித்தானியாவில் அனைத்து முழுநேர ஊழியர்களும் வருடத்திற்கு 28 நாட்கள் வருடாந்திர விடுப்புக்கு தகுதியுடையவர்கள்.
மேலும், பிரித்தானியாவில் பணி புரிவதால், ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்குப் பயணம் செய்வது வசதியானதாக மாறுகிறது.
வேலை விசாக்கள்:
திறமையான தொழிலாளர்களுக்கான விசா: இந்த விசாவானது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் தகுதியுடையவர்கள் என கருதப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதாகும். வேலை விசாவிற்கு தகுதி பெற: பிரித்தானியாவின் உள்விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் பிரித்தானியாவில் இருந்து செயல்படும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
வேலை அனுமதி தொடர்பான விவரங்களுடன் ஸ்பான்சர்ஷிப் சான்றிதழைப் பெற வேண்டும். தகுட்கியான தொழில்கள் பட்டியலில் உள்ள வேலையில் பணியாற்ற வேண்டும். B1 அளவில் CEFR அளவில் ஆங்கிலம் பேசவும், படிக்கவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் அறிந்திருக்க வேண்டும். இந்த விசாவானது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதன் பிறகு அது நீட்டிக்கப்படலாம்.
அத்துடன் பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேறவும் விண்ணப்பிக்கலாம். உடல்நலம் மற்றும் சுகாதார ஊழியர்கள் விசா: இந்த விசா மூலம், மருத்துவ நிபுணர்கள் பிரித்தானியாவில் நுழைந்து தங்கி, NHS அமைப்பால் தகுதியுடையதாகக் கருதப்படும் தொழில்களில் அல்லது அதற்கான சப்ளையராக இருப்பதன் மூலம் அல்லது முதியோருக்கான சமூகப் பராமரிப்பில் பணியாற்றலாம்.
சம்பளம்:
பிரித்தானியாவில் சராசரி ஆண்டு சம்பளமாக ஒரு முழு நேர ஊழியர் 37,430 பவுண்டுகள் வரையில் பெறுகிறார். பிரித்தானியாவைப் பொறுத்தமட்டில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.9 சதவீதம் ஊதிய உயர்வும் முன்னெடுக்கப்படுகிறது. பிரித்தானியாவில் சுமார் மூன்று மில்லியன் தொழிலாளர்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள, ஒரு மணி நேரத்திற்கு 11.44 பவுண்டுகள் சம்பளமாகப் பெறுகிறார். திருத்தப்பட்ட வயதின் அடிப்படையில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும்.
அதிக சம்பளம் தரும் வேலைகள்:
பல்வேறு துறைகளில் தலைமை நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள், இயக்குநர்கள், மருத்துவத்துறையில் சிறப்பு நிபுணர்கள், மென்பொருள் நிறுவனங்களில், முதலீட்டு வங்கியாளர்கள், நிதி ஆய்வாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள். பெருநிறுவன சட்டத்தரணிகள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் இயந்திரவியல், மின்சாரம், சிவில் பொறியாளர்கள்.
அதிக தேவையிருக்கும் வேலைகள்:
மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர்கள், விமான விமானிகள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், கணக்காளர்கள், சந்தைப்படுத்தல் மேலாளர்கள், தரவு விஞ்ஞானிகள், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் செயல்பாட்டு மேலாளர்கள்.
பணிபுரியும் நகரத்தைப் பொறுத்து ஒரு மூத்த நிர்வாகப் பணியின் சராசரி சம்பளம் 80,000 பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம். அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் போன்ற சிறப்பு மருத்துவ பயிற்சியாளர்கள் வருடத்திற்கு 60,000 முதல் 150,000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிக்கலாம்.
மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் பயிற்சி சட்டத்தரணிகள் போன்ற தொடக்க நிலை பதவிகளுக்கு 26,000 முதல் 80,000 பவுண்டுகளில் தொடங்கலாம். பிரித்தானியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது லண்டனில் சம்பளம் அதிகமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |