ஒவ்வொருவருக்கும் தலா 10,000 டொலர்... தீவு நாடொன்றை சொந்தமாக்க ட்ரம்பின் புதிய திட்டம்
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, கிரீன்லாந்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுதோறும் ரொக்கப் பணத்தை வழங்குவது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
10,000 டொலர் ரொக்கம்
ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முறையான திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தொடர்பு பரப்புரைகள் மற்றும் சலுகைகள் குறித்தும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
அதில் ஒன்று, டென்மார்க் அரசாங்கம் கிரீன்லாந்து தீவுக்கு வழங்கும் 600 மில்லியன் டொலர் மானியங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு கிரீன்லாந்து குடியிருப்பாளருக்கும் ஆண்டுக்கு சுமார் 10,000 டொலர் ரொக்கம் வழங்குவதாகும்.
ஆனால், கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு இல்லை என்றும் அதை இணைக்க முடியாது என்றும் டென்மார்க் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து ட்ரம்ப் நிர்வாகம் வற்புறுத்தலுக்குப் பதிலாக வலியுறுத்தலில் கவனம் செலுத்தி வருகிறது, மேலும் மொத்தமுள்ள 57,000 குடிமக்களையும் நம்ப வைத்து அமெரிக்காவில் சேரக் கேட்க வேண்டும் என்ற ஒரு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு என சமூக ஊடகங்களில் தொடர்ந்து விளம்பரங்களை முன்னெடுக்கவும் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கிரீன்லாந்து மக்களுக்கும் 2,500 மைல்கள் தொலைவில் உள்ள அலாஸ்கா மாகாண மக்களும் பூர்வகுடி தொடர்பிருப்பதாக கட்டமைக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
கிரீன்லாந்து துணிந்து போராடும்
மேலும், தீவுவாசிகளை கவர எவ்வளவு செலவு செய்தாலும், கிரீன்லாந்தின் இயற்கை வளங்களிலிருந்து பெறப்படும் புதிய வருவாயிலிருந்து ஈடுசெய்யப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
இது இவ்வாறு இருக்க, கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிந்துள்ளன. அத்துடன் கடந்த வாரம் பொறுப்புக்கு வந்த புதிய பிரதமர் Jens-Frederik Nielsen தெரிவிக்கையில்,
ட்ரம்பின் விருப்பத்திற்கு எதிராக கிரீன்லாந்து துணிந்து போராடும் என்றார். இருப்பினும் கிரீலாந்தை அமெரிக்கா கைவசப்படுத்துவது 100 சதவீத உறுதி என்றே ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |