குழந்தையின் காலை கடித்த ஜோ பைடன்! ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம்
ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது குழந்தைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிக் கொண்ட ஜோ பைடன்
புதன்கிழமை மாலை வெள்ளை மாளிகையில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது இரண்டு குழந்தைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளையாட்டாக கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாஸ் தீம் பாடலின் பின்னணியில் கோழி போன்று உடையணிந்து இருந்த குழந்தையின் கால்களை விளையாட்டாக கடித்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் படம் பிடிக்கப்பட்டார் என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
President Trump is mingling with garbage men at his rally in Wisconsin.
— Nick Sortor (@nicksortor) October 31, 2024
Meanwhile, Joe Biden is literally BITING BABIES at the White House Halloween Party.
WTF IS THIS TIMELINE? pic.twitter.com/wYIzsDjxDt
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலுக்கு மத்தியில் கோழி போன்ற ஹாலோவின் உடையணிந்த குழந்தையை அவரது தாயார் தாங்கி கொண்டு இருந்த போது கடிப்பது போன்று பாவனை செய்த ஜோ பைடனின் செய்த இந்த செயல் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
பைடனின் செயல் குறித்து X தளத்தில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள வலதுசாரி ஆதரவாளர் நிக் சோர்டர், விஸ்கான்சினில் ஜனாதிபதி வேட்பாளர் தனது குப்பை லொறி பேரணியை நடத்தும் வேளையில், ஜனாதிபதி ஜோ பைடன் குழந்தை கடித்து கொண்டு இருக்கிறார். இது எந்த மாதிரியான காலவரிசை? என்று தெரிவித்துள்ளார்.
“Joe Biden bites a baby”
— Steve Krakauer (@SteveKrak) October 30, 2024
And 2024 is complete… https://t.co/hsj3mBwcg4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |