கமலா ஹாரிஸை 'ஜனாதிபதி' என அழைத்த ஜோ பைடன்! மீண்டும் அவருக்கு 'மனநோய்' என கேலி செய்து வைரலாக்கப்படும் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸை 'ஜனாதிபதி' என கூறியது சமூக வளைதளங்களில் கேளிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
எதிர்ச்சியாக வார்த்தை தவறி கூறிய அந்த விடியோவை இணையதள வாசிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
ஏற்கெனெவே பதவி ஏற்பதற்கு முன்பு ஒரு முறை, கமலா ஹாரிஸை 'President-Elect' என அவர் தவறுதலாக அழைத்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீண்டும் கமலா ஹாரிஸை 'President' என கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மீண்டும் ஜோ பைடனுக்கு Dementia எனும் மூளைநோய் இருக்கிறதா என கேலி செய்யப்படுகிறார்.
When is enough enough? It is overly transparent that President Biden‘s mental faculties are extremely impaired. This is becoming laughable in the international community. https://t.co/RjpsPtucBI
— Bernard B. Kerik (@BernardKerik) March 19, 2021
ஏற்கெனவே, ஜோ பைடன் ஒரு முன்னிலை மட்டும் தான், விரைவில் கமலா ஹாரிஸ் பதவியேற்பார் என விவாதங்கள் பரவிவரும் நிலையில், இந்த 'ஸ்லிப்-ஆஃப்-டாக்' அந்த ஊகங்களுக்கு எரிபொருளாக அமைந்துள்ளது.
பலரும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அவரது உரை Prompt செய்யப்படுவதால், இது அவருடைய தவறு இல்லை என ஒரு தரப்பு கூறுகிறது. மேலும், இந்த சிறிய வார்த்தை பிழை பெரிய விடயமாக பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என கருதுகின்றனர்.
இதற்கிடையில், கமலா ஹாரிஸ் இறுதியில் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார் என்று பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.