உலக அளவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்: அமெரிக்க ஜனாதிபதி
தாங்கள் வாழும் சமூகத்தில் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்தித்தாலும் இஸ்லாமியர்கள் அமெரிக்காவை பலப்படுத்துகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் ரமலான் பண்டிகையை கொண்டாடினார். பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது வெள்ளை மாளிகையில் ஈத் பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது தான் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
டொனால்டுக்கு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது இந்த வழக்கம் நின்று போனது. வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்த மக்களிடம் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது,
'உலக அளவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர். அவர்கள் வாழும் சமூகத்தில் அச்சுறுத்தல்களையும், சவால்களையும் சந்தித்தாலும் அமெரிக்காவை ஒவ்வொரு நாளும் பலப்படுத்துகின்றனர். எவரும் யாருக்கும் பாகுபாடு காட்டி ஒடுக்கக் கூடாது, அவர்களின் மத நம்பிக்கைக்காக ஒடுக்கப்படக் கூடாது' என்றார்.
மேலும் பேசிய அவர் வன்முறை, மோதல்கள், பஞ்சம் மற்றும் நோய் ஆகியவற்றால் இந்த பண்டிகையை கொண்டாட முடியாதவர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்று தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச மத சுதந்திரத்திற்கான தூதராக பணியாற்றும் முதல் இஸ்லாமியராக Rashad Hussain-ஐ நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.