ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த குடும்பங்களுடன் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் உத்தரவு!
புலம்பெயர்ந்த குடும்பங்களுடன் குழந்தைகளை சேர்த்து வைக்கும் விதமாக மூன்று முக்கிய உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் "zero-tolerance" எனும் குடியேற்ற கொள்கையை கொண்டுவந்தது.
அதன் அடிப்படையில் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையைத் தாண்டும்போது ஆவணமற்ற மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைங்கள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.
2017-18க்கு இடையில் குறைந்தது 5,500 குழந்தைகளை தங்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முந்தைய அதிபர்களின் குடியேற்ற கொள்கையின் நிகழ்ச்சி நிரலை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
மேலும், டிரம்பின் குடியேற்ற கொள்கையால் பிளவுபட்ட புலம்பெயர்ந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கக் கோரி 3 நிறைவேற்று உத்தரவுகளில் அதிபர் ஜோ பைடன் செவாய்க்கிழமை கையெழுத்திட்டார்.
பைடனின் உத்தரவின்படி ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, சுமார் 600 முதல் 700 குழந்தைகளை தங்கள் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கவுள்ளது.