விபத்தில் உயிரிழந்த முதல் மனைவி, குழந்தைக்கு அதிபர் ஜோ பைடன் அஞ்சலி
கார் விபத்தில் உயிரிழந்த தனது முதல் மனைவி மற்றும் குழந்தையின் கல்லறைக்கு சென்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அஞ்சலி செலுத்தினார்.
1972-ஆம் ஆண்டில், டெலாவேர் வாக்காளர்கள் ஜோ பைடன் செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது முதல் மனைவி நீலியா பிடன் (Neilia Biden) மற்றும் மகள் நவோமி (Naomi) கார் விபத்தில் உயிரிழந்தனர்.
டிசம்பர் 18-ஆம் திகதி கிறிஸ்துமஸ் மரத்தை எடுக்கச் சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அப்போது பைடன்-நீலியா தம்பதியின் மற்ற இரு குழந்தைகளான நான்கு வயது Beau Biden மற்றும் மூன்று வயதுடைய Hunter Biden ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று 49-வது ஆண்டு நினைவு நாளில் தனது முதல் மனைவிக்கும் மற்றும் கைக்குழந்தையாக இருந்த மகளுக்கும் மரியாதை செலுத்த, ஜோ பைடன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவரது சொந்த மாநிலமான டெலாவேரில் உள்ள செயின்ட் ஜோசப் பிராண்டிவைன் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்ரூ அஞ்சலி செலுத்தினார்.
இந்த சம்பவம் பிடனின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது. அவரது ஆளுமை மற்றும் அரசியல் வாழ்க்கையை வடிவமைத்தது.
அவர் செனட்டில் 35 ஆண்டுகள், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எட்டு ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தார். இப்போது கடந்த ஒரு வருடமாக ஜனாதிபதியாக இருக்கிறார்.
இந்த சம்பத்திற்கு பிறகு, ஜோ பைடன் 1977-ஆம் ஆண்டு ஜில்லை (Jill Biden) மணந்தார். அவர்களுக்கு ஆஷ்லே (Ashley Biden) என்ற மகள் உள்ளார். இருவரும் சனிக்கிழமையன்று ஜோ பைடனுடன் தேவாலயத்தில் இருந்தனர்.


