அமெரிக்காவில் சூறையாடிய சூறாவளி! இதுவரை 27 பேர் பலி.. ஜனாதிபதி பைடன் கூறிய விடயம்
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான புயல்களில் ஒன்றாக ஐயான் இருக்கும் - ஜனாதிபதி ஜோ பைடன்
100 பில்லியன் டொலர்களுக்கு மேல் இந்த சூறாவளி சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என தகவல்
அமெரிக்காவில் ஐயான் சூறாவளிக்கு 27 பேர் பலியான நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் கடற்கரை அருகே உருவான ஐயான் சூறாவளியின் கோர தாண்டவத்தால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும், பலர் இந்த தாக்குதலுக்கு பலியாகினர். இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 100 பில்லியன் டொலர்களுக்கு மேல் இந்த சூறாவளி சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tannen Maury/EPA-EFE
Steve Helber/AP
இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், 'நாட்டின் வரலாற்றில் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது இருக்கும். இதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து மீண்டு வர பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும். இது அமெரிக்காவுக்கே ஏற்பட்ட நெருக்கடி' என தெரிவித்துள்ளார்.
REUTERS/Jonathan Ernst