ஜோ பைடன்- டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: வெள்ளை மாளிகை வெளியிட்ட முக்கிய தகவல்
டொனால் டிரம்ப் வீட்டை ரோபோ நாய்கள் பாதுகாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் வெற்றி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்று நாட்டின் 47 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
வெற்றிக்கு 270 தேர்தல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 226 தேர்தல் வாக்குகளை பிடித்தார், ஆனால் டொனால்ட் டிரம்ப் 312 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்று தன்னுடைய அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வெற்றி தீர்மானிக்கும் 7 மாறும் மாகாணங்களிலும் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தீர்க்கமான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அரிசோனாவில் கணிக்கப்பட்ட வெற்றியுடன் Grand Canyon மாகாணத்தின் 11 தேர்தல் வாக்குகளையும் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார்.
ஜோ பைடன் சந்திப்பு
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரில் சந்திக்க உள்ளார்.
வெள்ளை மாளிகையில் வைத்து நவம்பர் 13ம் திகதி புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் தேர்தல் வெற்றி உறுதியானதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் டொனால்ட் டிரம்புடன் அமைதியான மற்றும் ஒழுக்கமான முறையில் அதிகார மாற்றம் உறுதி செய்யப்படும் என ஜோ பைடன் உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |