ஜோ பைடனுக்கு புத்திகூர்மை இல்லை: டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்கர்கள்!
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க ஜோ பைடனுக்கு போதுமான புத்திகூர்மை இல்லை என பெரும்பாலான அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர்.
ஜோ பைடனுக்கு புத்திகூர்மை இல்லை
ஒரு புதிய கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான அல்லது 63 சதவீத அமெரிக்கர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரண்டாவது முறையாக திறம்பட பணியாற்றுவதற்கான மனக் கூர்மை இல்லை என்று கூறியுள்ளனர்.
அதேநேரம், 54 சதவீதம் பேர் டொனால்ட் டிரம்ப் மனதளவில் போதுமான அளவு கூர்மை உள்ளவர் என்றும் கூறியுள்ளனர்.
AP
மக்களிடையே ஜோ பைடன் மீதான நம்பிக்கை குறைவு
இதேபோன்று 2020-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 43 சதவீதம் பேர் ஜோ பைடனுக்கு ஜனாதிபதியாக இருக்கும் மன திறன் இல்லை என்று நம்பினர். மேலும் ஓராண்டுக்கு முன்பு, 54 சதவீதம் பேர் இதையே நம்பினர். இப்போது, இன்னும் அதிகமானோர் (63 சதவீதம்) அவருக்கு போதுமான புத்திகூர்மை இல்லை என நம்புகின்றனர்.
ஏப்ரல் 28 முதல் மே 3 வரை வாஷிங்டன் போஸ்ட்-ஏபிசி நியூஸ் கருத்துக்கணிப்பிற்காக நாடு தழுவிய அளவில் 1,006 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு சீரற்ற கணக்கெடுப்பில் இது தெரியவந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மறுதேர்தல் பிரச்சாரம் தொடங்கும்போது எப்படி குறிப்பிடத்தக்க தடைகளை எதிர்கொள்கிறார் என்பதை இது காட்டுகிறது.
62 சதவீத அமெரிக்கர்கள் 80 வயதான பிடனுக்கு ஜனாதிபதியாக செயல்படும் அளவுக்கு உடல் ஆரோக்கியம் இல்லை என்று கூறியுள்ளனர்.
Photograph: Anadolu Agency/Getty Images
டொனால்ட் டிரம்ப்
இதற்கு மாறாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பணியாற்றும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருப்பதாக 64 சதவீத அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த பதவியேற்பு நேரத்தில் டிரம்ப் ஜனவரி 2025-ல் 78 வயதை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, 54 சதவீதம் முதல் 36 சதவீதம் வரையிலான வித்தியாசத்தில் ஜோ பைடனை விட டிரம்ப் அதிபராக இருந்தபோது பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டார் என்று அமெரிக்கர்கள் நம்புகின்றனர்.