உக்ரைனியர்களை ஈரானியர்கள் என்ற ஜோ பைடன்! கமலா ஹாரிஸ் கொடுத்த ரியாக்ஷன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரேனியர்களை தவறுதலாக ஈரானியர்கள் என்ற கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்கான வருடாந்திர தொடக்க கூட்டம் (State of the Union Address) நேற்று (மார்ச் 1) நடைபெற்றது. அப்போது தனது உரையை நிகழ்த்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், எதிர்ச்சியாக தன்னை அறியாமல் உக்ரைனியர்கள் என்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று கூறிவிட்டார். "புடின் கீவ்வை டாங்கிகள் மூலம் சுற்றிவளைக்கலாம், ஆனால் அவர் 'ஈரானிய' மக்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் ஒருபோதும் பெற மாட்டார்" என்று பைடன் கூறினார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜோ பைடனுக்கு பின்னால் அமர்ந்திருப்பதைக் காணலாம். ஜோ பைடன் ஈரானியன் என்று கூறியபோது கமலா ஹாரிஸ் "உக்ரேனியன்" என்று வாயெடுபதும் காணமுடிகிறது.
LMFAO Kamala appears to mouth “Ukrainian” when Joe Biden said Iranian.
— Greg Price (@greg_price11) March 2, 2022
pic.twitter.com/E28NEmiPOv
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி, 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோ குறித்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
அமெரிக்க அதிபர் வார்த்தைகளில் தடுமாறுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, துணை ஜானதிபதி கமலா ஹாரிஸை என்று கூறுவதற்கு பதிலாக "ஜனாதிபதி ஹாரிஸ்" (President Harris) என்று தவறாக அழைத்தார்.